pongi valiyum thaeva kirupai பொங்கி வழியும் தேவ கிருபை
பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
1. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே — பொங்கி
2. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் — பொங்கி