potri thuthippom yem deva devanai போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித் துதிப்பேன்
இயேசு என்னும் நாமமே (நாமமே)
என் ஆத்துமாவின் கீதமே (கீதமே)
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
2.கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
3.யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயத்தொனியோடு பாதுகாத்த
அன்பை என்றும் பாடுவேன்
4.தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
5.பூமி அகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
ஈந்து தொண்டு செய்குவேன்