punniyar ivar yaro vilunthu jebikkum புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்
வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்
பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்
என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்