raajan paalan piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரே
ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார்
… ராஜன்
1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார்
அன்பன் ஏழையாய் வந்தார்
அவர் மண்ணினில் மானிடரை
காக்க வென்றே அவதரித்தார்
… ராஜன்
2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார்
… ராஜன