ratha kottai kulle – இரத்தக் கோட்டைக்குள்ளே
Ratha Kottai Kulle
இரத்தக்கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது
1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்
2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே
3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்
4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை
5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்