rojaappoo vaasamalarkal ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம்
2. மன்னனாம் Eric மணமகளோடு
அன்றிலும் பேடும்போல் ஒன்றித்துவாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம்
வேண்டுதலோடு தூவிடுவோம்
3. மணமகள் Suganya இணைபிரியாது
மணமகன் மீது மிக அன்புகூர்ந்து
மனைவிக் கழகு தருங்குணம் யாவும்
பெற்றி இலங்கிடத் தூவிடுவோம்
4. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவ ரென்றும்
பக்தியாய் வாழ்ந்திடத் தூவிடுவோம்