• waytochurch.com logo
Song # 26268

saalaemin raasaa sangaiyin raasaa சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் – இந்தத்


1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், – இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர் மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதேளூ – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே.
4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதேளூ – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே.
5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதேளூ – உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே.

1. saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen, – inthath
thaaranni meethinil aalukai seythidach saduthi vaarumaen
2. seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach
seer mikum maantharkal thaetiththirikinta seythikaeleero?
3. etti etti ummai annnnaanthupaarththuk kannpooththup pokuthaeloo – neer
suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae.
4. nangai erusalaempattinam ummai naatiththaeduthaeloo – intha
naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae.
5. saatchiyaakach supavisesham thaarannimaevuthaeloo – unthanj
saatchikalutaiya iraththangalellaam thaavikkoovuthae.

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com