sakala janangale kaikotti சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே
ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமே
உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து பாடிடுவோம்
போற்றிப் போற்றிப் பாடிடுவோமே
தேற்றி நம்மை காத்திடும் தேவனை
ஊற்றிடுவாரே ஆவி தனையே
சாற்றிடுவோம் துதியை
தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம் – தேசத்தில்