senaigalin devan nammodu சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார்
சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
பாக்கியம் அடைந்திடுவாய்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்
ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார்
விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய்
சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம்