sinnagnsiru suthanae ennarum thavamae சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே
1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு
– சின்னஞ்சிறு
2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ
– சின்னஞ்சிறு
3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ
– சின்னஞ்சிறு
4. பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ
– சின்னஞ்சிறு