thaai kooda pillaigalai – தாய் கூட பிள்ளைகளை
Thaai Kooda Pillaigalai
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)
நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)