thaevathi thaevanae peththalai uurinilae தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
1. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
தம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்
தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே
2. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
மந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலே
கந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
ஆ வினோதமே ஆ வினோதமே
3. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
உன்னதத்தின் தேவன் தோன்றினார், தேவ பாலனாய் பிறந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே