then inimaiyilum yesuvin naamam தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
சரணங்கள்
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே — தேன்
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே — தேன்
3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ, மனமே — தேன்
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே — தேன்
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே — தேன்