thuthippen thuthippen yesu devanai துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அல்லேலூயா பாடி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அனு
துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
தூயவனாய் வந்த தேவகுமாரனை
சரணங்கள்
1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
தம் ஜனத்தின் கூக்குரல்
கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
லோகப் பாவச் சுமைதனை
சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்
2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
எங்கள் இயேசு நாயகர்
பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
நிலையங்கி தரித்தோராய்
கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்
3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
அவரருகில் வருவீர்;
வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
லோக பாவத்தைச் சுமந்தார்;
பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்
4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
பரிசுத்தர் யேகோவாவை
அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
சர்வ வல்ல பராபரன்
வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்