thuthisei manamey துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் மனமே நிதம் துதிசெய் (2)
துதிசெய்…. இம்மட்டும் நடத்தின உன் தேவனை,
இன்றும்! என்றும்!
நன்றி மிகுந்த மனதோடே (2)
1.முன்காலமெல்லாம் உன்னைத்தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே!
2.ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏகபரன் உன் காவலனாய் இருந்தாரே!
3.சோதனை பலவாய் மேகம்போல் உன்னை
சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை!