ulakil vanthaar theyva suthan உலகில் வந்தார் தெய்வ சுதன்
உலகில் வந்தார் தெய்வ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
அதிக் குளிரில் நடு இரவில்
உதித்தனரே மானிடனாய்
1. பெத்தலையில் மாடடையில்
புல்லணையில் அவதரித்தார்
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே
2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினரே விண்ணவனை
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே