um prasannam nadi vandean – உம் பிரசன்னம் நாடி
Um Prasannam Nadi Vandean
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே
1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே
2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே