ummaiye nambi ullomai உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே
நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம்
நீரே என் வழி ஐயா
என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி
மதிலைத் தாண்டச் செய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கினீர்
உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்
ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
விழுந்திடக் காணச் செய்தீர்