un nenjilae unndaana visaarangalai nee உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி
விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.
2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது
வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.
3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ
திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு
நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.
4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.