Un Pukazhai Paatuvathu உன் புகழைப் பாடுவது – என்
உன் புகழைப் பாடுவது – என்
வாழ்வின் இன்பமய்யா
உன்னருளைப் போற்றுவது – என்
வாழ்வின் செல்வமய்யா
1. துன்பத்திலும் இன்பத்திலும் – நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் – நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல் – நீ
என்றும் அணைத்திருப்பாய்
2. பல்லுயிரைப் படைத்திருப்பாய் – நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் – நீ
என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்குந்தாழ் ஒன்று
இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல் நான்
என்றும் வாழ்ந்திருப்பேன்
un pukalaip paaduvathu – en
vaalvin inpamayyaa
unnarulaip pottuvathu – en
vaalvin selvamayyaa
1. thunpaththilum inpaththilum – nal
thanthaiyaay neeyiruppaay
kannnayarak kaaththirukkum – nal
annaiyaay arukiruppaay
anpu enum amuthaththinai naan
arunthida enakkalippaay
unnintu piriyaamal – nee
entum annaiththiruppaay
2. palluyiraip pataiththiruppaay – nee
ennaiyum aen pataiththaay
paavaththilae vaalnthirunthum – nee
ennaiyum aen alaiththaay
anpinukku ataikkunthaal ontu
illai entunarnthaen
un anpai maravaamal naan
entum vaalnthiruppaen