un vetkathirku pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக
Un Vetkathirku Pathilaga
உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பெலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்
துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்த்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே -2
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே -2
ஆனந்த தைலத்தை கொடுப்பாரே
சோர்வையெல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார் -2
நீதிதேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார்-2
நல்ல ஆறுதல் தந்திடுவார்
திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே -2
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் -2
பரலோக மகிமையை அடைந்திடுவாய்