• waytochurch.com logo
Song # 26562

unnathamaanavarin uyar maraivilirukkiravan உன்னதமானவரின் – உயர் மறைவிலிருக்கிறவன்


1. உன்னதமானவரின் – உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
பல்லவி
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே — அவர்
3. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் — அவர்
4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே — அவர்
5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் — அவர்
6. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் — அவர்
7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் — அவர்
8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் — அவர்

1. unnathamaanavarin – uyar maraivilirukkiravan
sarva vallavarin nilalil thanguvaan
ithu parama silaakkiyamae
pallavi
avar settaைyin geel ataikkalam pukavae
tham sirakukalaal mooduvaar
2. thaevan en ataikkalamae
en kottaைyum aranumavar
avar saththiyam parisaiyum kaedakamaam
en nampikkaiyum avarae — avar
3. iravin payangaraththukkum
pakalil parakkum ampukkum
irulil nadamaadum kollai nnoykkum
naan payappadavae maattaen — avar
4. aayiram pathinaayiram
paerkal un pakkam vilunthaalum
athu oru kaalaththum unnai anukidaathae
un thaevan un thaaparamae — avar
5. thaevan un ataikkalamae
oru pollaappum unnaich serumo
oru vaathaiyum un koodaaraththaiyae
anukaamalae kaaththiduvaar — avar
6. un valikalilellaam
unnaith thootharkal kaaththiduvaar
un paatham kallil idaraathapati
thangal karangalil aenthiduvaar — avar
7. singaththin maelum nadanthu
valusarppaththaiyum mithippaay
avar naamaththai nee muttum nampinathaal
unnai viduviththu kaaththiduvaar — avar
8. aapaththilum avarai naan
nnokkik kooppidum vaelaiyilum
ennai thappuviththae muttum iratchippaarae
en aaththuma naesaravar — avar

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com