unnathaththin thootharkalae உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே
2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்
3. இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்
4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்