uththamamaay mun sella உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
1. உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (2)
2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2)
3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (2)
4. இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (2)
5. தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே (2)