vaaliparthamakkoonn athuvaakum வாலிபர்தமக்கூண் அதுவாகும்
1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்;
வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம்;
படிமீ தாத்மபசி தணிக்கும்.
2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்.
3. புலைமேவிய மானிட
ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்.
4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது