vaana thuuthar saenaikal வான தூதர் சேனைகள்
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)
1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
– வானதூதர்
2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்
சென்றனர் பாலனை தரிசிக்க
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
– வானதூதர்