vaanamum poomiyum maaritinum வானமும் பூமியும் மாறிடினும்
வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல்ல தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையியென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே
கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே
கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி
கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனே உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி
கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி
வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் — கல்வாரி