vaarum naam ellorum kooti வாரும் நாம் எல்லோரும் கூடி
வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!
1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும்
2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்
3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் — வாரும்
4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் — வாரும்
5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்