vaarungal en naesarae வாருங்கள் என் நேசரே
வாருங்கள் என் நேசரே
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்
1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிரம்பிடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் ஆடி பாடுவேன்
நடனமாடி மகிழ்வேன்
2. நேசத்தால் சோகமானேன்
உம் பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்
3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி ரட்சகா உம்மை தொழுவேன்