vallamai thaarume belaveenan வல்லமை தாருமே
வல்லமை தாருமே
பெலவீனன் நானல்லோ
பெலவீன நேரத்தில் உம்
பெலனைத் தாருமே
பெலவீன நேரத்தில் உம்
பெலனைத் தாருமே
1. வாழ்க்கையின் பாரங்கள்
என்னை நெருக்குதே
உலகத்தின் ஈர்ப்புகள்
என்னை இழுக்குதே
2. ஆவியின் வல்லமை
என் மேல் ஊற்றுமே
முழுமையாய் என்னையும்
மறுரூபமாக்குமே
3. பரிசுத்த வாழ்க்கையை
வாழ நினைக்கிறேன்
பாவத்தின் பிடியிலே
சிக்கித் தவிக்கிறேன்