vanandira vallvu – வனாந்திர வாழ்வு அது
Vanandira Vallvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2
1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2
3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே