varungal iraimakkalae வாருங்கள் இறைமக்களே
வாருங்கள் இறைமக்களே
இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட
வாருங்கள் இறைமக்களே
குருவுடன் கூடி குடும்பமாய் மாறி – 2
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று – 2
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே
பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து – 2
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட