veenaiye olitthidu vinnavar piranthar வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்
வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்
வீணையே ஒலித்திடு
விண்ணவர் பிறந்தார்
கவிதையே மலர்ந்திடு
கர்த்தர் பிறந்தார் (2)
தேவன் சாரோனின் வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் அழகு லீலி (2)
– வீணையே
1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே
விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் – தேவன்
2. பூங்குயில்களே ஆடும் மயில்களே
தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் – தேவன்
3. இன்பாடல்கள் உம் கிருபைகள்
என்றும் பாடுவேன் ஏசு பாலனே – வீணையே