vinnaga katre nee neer விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்
ஜலத்தின் மேல் அசைவாடிய
தூயதேவா ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய
என்மேல் அசைவாடுமே
அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே
எந்நாளுமே என் பாத்ரம்
நிரம்பி வழிய வேண்டுமே
அக்கினி ரதத்தின் மேல்
என்னைக் கொண்டு செல்லுமே
பரலோகத் தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே
முழங்காலை முடக்கியது
முரங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழத்துச் செல்லும் என்னையே
மறுரூப அனுபவம்
எனக்கு வேண்டும் தெய்வமே
மறுரூப மலைதனிலே
அழைத்துச் செல்லும் என்னையே