vinnnnil or natchaththiram விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
1. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்