vinnoer makizhnthu paatum paatal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உம்மைத் தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உம்மை வரவேற்க
1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வில் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
என் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ
– விண்ணோர்
2. அன்னை மரியும் அவரது மடியில்
உம்மைத் தாலாட்ட
மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
வானவன் அறிவித்து
என் வாழ்வில் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ
– விண்ணோh