• waytochurch.com logo
Song # 26670

visuvaasaththaal neethimaan pilaippaan விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் – மெய்


விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு
2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு
3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்
சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு
4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு
5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு
6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு

visuvaasaththaal neethimaan pilaippaan; – mey
visuvaasamullavan thaan thalaippaan.
1. nisamaaka naam paavaththinil piranthor; – mulu
vishamaana paavaththinaal iranthor. — visu
2. uyyum vakaiyariyom; pelanaeyillai; – narar
seyyum kiriyaikalil nalanaeyillai. — visu
3. paavak kadanolikkap palamae yattaோm; – ech
saapam alivinukkam thakaimai yuttaோm. — visu
4. thaevan kirupaiyonte namaip paarkkum; – avar
maavanpae paavikalin kadan theerkkum. — visu
5. neethimaanaik kuttanjaatta yaaraalaeyaakum? – avan
paathakam palimaranam, yaavumae pokum. — visu
6. thaevanin pillai naanente avan thulluvaan; – theeya
paava valithanaip pakaiththae thalluvaan. — visu

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com