what can wash away sinpaava thoesham பாவ தோஷம் நீக்கிட
1. பாவ தோஷம் நீக்கிட
மீட்பரின் இரத்தம் தானே
தீய குணம் மாற்றிட
மீட்பரின் இரத்தம் தானே
மெய்யாம் ஜீவ நதி
பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்
மீட்பரின் இரத்தம் தானே
2. என்னை சுத்தமாக்கிட
மீட்பரின் இரத்தம் தானே
மன்னிப்பை நான் பெற்றிட
மீட்பரின் இரத்தம் தானே
3. வேறே இரட்சிப்பில்லையே
மீட்பரின் இரத்தம் தானே
புண்ணிய கிரியை செல்லாதே
மீட்பரின் இரத்தம் தானே
4. மோட்ச மார்க்கம் இதுவே
மீட்பரின் இரத்தம் தானே
ஏக இரத்த தீர்த்தமே
மீட்பரின் இரத்தம் தானே