win thoothar vaanil thondriye thondriye விண் தூதர் வானில் தோன்றியே
விண் தூதர் வானில் தோன்றியே
விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே
நற்செய்தி ஒன்று கூறினார்
இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்
இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்
துன்பம் இன்பமாக மாறிட
மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ!
1. சருவாதிலோக தேவனே
மானிடனாகத் தோன்றினார்
சந்திக்க வந்த உந்தனின்
சாபம் தனைப் போக்கினார்
2. பரலோக மேன்மை நீங்கியே
தன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார்
மாந்தர் பாவம் யாவும் போக்கவே
பலியாகவே மாறினார்
3. தேவன் மாந்தர் உறவை ஏற்கவே
பாலமாக இயேசு பிறந்தார்
பாவிகள் மேல் கொண்ட அன்பினால்
தேவாதி தேவன் உதித்தார்