yakoba pola naan யாக்கோபைப் போல நான் போராடுவேன்
யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
நான் விட மாட்டேன்
அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்
கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா
தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்