yen alugirai yarai – ஏன் அழுகின்றாய் யாரை
Yen Alugirai Yarai
ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
1. கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
2. பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்
3. கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்