yenathu ullam yaruku எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்
என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே – இயேசையா
1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே