yengumullor yaarum serthu sthotharippome எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே
1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு
2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே — எங்கு
3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே — எங்கு