yesu iratchakarin pirantha naal ithuvae இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே
1. வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி (2)
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே (2)
– இயேசு
2. பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல (2)
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே (2)
– இயேசு
3. பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே (2)
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே (2)
– இயேசு