yesu kiristhuvin anpu இயேசு கிறிஸ்துவின் அன்பு
இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2)
2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2)