yesu nallavar paattu paadungal – இயேசு நல்லவர் பாட்டு
Yesu Nallavar Paattu Paadungal
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்
2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்
3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (2)
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்