yesu nallavar yesu vallavar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு இரட்சகரே
அல்லேலுயா ஆராதனை
ராஜ ராஜனுக்கே
1. வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
வயலாய் மாற்றினாரே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
களிப்பாய் மாற்றினாரே
குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
கவலை தீர்த்தாரே
கண்ணீர் துடைத்தாரே – (2) அவர்
2. சேற்றினின்றும் குழியினின்றும்
தூக்கி எடுத்தாரே
கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
உறுதிப்படுத்தினாரே
புதிய பாடல் நாவில் தந்து
பாட வைத்தாரே
துதிக்க செய்தாரே – என்னை (2)
3. பாவம் யாவும் மன்னித்தாரே
சாபம் நீக்கினாரே
கிருபையாலே நீதிமானாய்
என்னை மாற்றினாரே
பிள்ளையாக என்னை கூட
ஏற்றுக் கொண்டாரே
அப்பா இயேசுவே – என் (2)
4. பரலோகத்தில் எனது பெயரை
எழுதி வைத்தாரே
நானும் வாழ அங்கோர் இடத்தை
தெரிந்து வைத்தாரே
இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
பறந்து சென்றிடுவேன்
சுகமாய் வாழ்ந்திடுவேன் – (2) அங்கு