yesu raja ezhai en ullam இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
1. என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா
2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா
3. ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
4. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்