yesu thaanae athisaya theyvam இயேசு தானே அதிசய தெய்வம்
இயேசு தானே அதிசய தெய்வம்
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரை தெய்வமாய் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைத்து இருப்பதே சிலாக்கியம்
2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்
3. மனிதன் மறுபிறப்படைவது அவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனை தேடு
இறைவனோடு பரலோகம் சேரு