yesu thiru naamam yeeya uyar magimaiyil இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
இயேசு திருநாமம் எனக்குயிரே
ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்
ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்
– இயேசு … எனக்குயிரே
1. இந்த சபையோரும் உன் செயலாம்
இதை நன்றுணர்ந்தே – புகழ்
நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)
மிஞ்சும் வாக்கும் செய்கை
ஒன்றிதே உம் மீட்பை
சென்றுலகெங்கும் தந்தையுகந்தை
நன்று காட்டவே – இயேசு … எனக்குயிரே
2. விண்ணுலகோர் பாட
மண்ணுலகோர் அடிபணிந்திட
பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)
எந்தன் நடு வா வா
உந்தன் அருன் தா தா
வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்
உந்தன் அடிமை நான் – இயேசு … எனக்குயிரே